Yegovaa Nisi | யேகோவா நிசி

யேகோவா நிசி யேகோவா நிசி
யேகோவா நிசியை யேகோவா நிசியை
ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே (2)

வீறுகொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறுகொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா
யூதசிங்கம் யுத்தசிங்கமே (2) – யேகோவா நிசி

கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்ய ஆவி நிற்கிறார்
கர்த்தர் வல்ல யுத்த வீரரே (2) – யேகோவா நிசி

சத்ரு வெள்ளம்போல ஏறி வருகின்றான்
சத்ய ஆவி வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷம் இங்கே செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்ல கோட்டையே (2) – யேகோவா நிசி

ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே
ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ ? – யேகோவா நிசி

நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவதேவ சேனையல்லவோ? – யேகோவா நிசி

முடிந்ததென்று முழங்கி நிற்கும் வீரனே
முற்றும் அவனை முறியடித்த தீரனே
சிலுவையில் சீரம் நசித்த சீலனே
சிலுவைக் கொடியை ஏற்றும் தேவ பாலனே
வெற்றி வாகை சூட்டிப் பணிகிறோம் (2) – யேகோவா நிசி

அல்லேலூயா தேவநாமம் வாழ்கவே!
அல்லேலூயா இயேசு இராஜா வருகவே!
அல்லேலூயா ஆவிபுகழ் ஓங்கவே!
அல்லேலூயா தேவபடை வெல்கவே!
வாழ்க! வாழ்க வாழ்க! வாழ்கவே! – யேகோவா நிசி

Close Menu
error: Content is protected !!