To Advertise Contact - christmusicindia@gmail.com

Yegovaayeerae Yegovaayeerae | யேகோவாயீரே யேகோவாயீரே

Loading

யேகோவாயீரே (2) யாவுமேனக்காய் முடித்தீரே
லோக ஸ்தாபன முதலே
கிறிஸ்து இஎசுவிலே முன்
அறிந்து அழைத்தவரே

ஆபிரகாமுக்கே தேவ பர்வதத்தில்
ஆயத்தமாக்கி வைத்ததோர் ஆட்டைப்போல்
தாயின் கட்டில் யான் சேயனாத் தோன்றுமுன்
தற்பரனே யாவும் கருதி வைத்தீர்

கானக மதிலே என்னைப் பின் தொடர்ந்தே
ஞானக் கண்மலையாய் தாகங்கள் தீர்ப்பாரே
வான மன்னாவாய் உம் மாறிடா வார்த்தையால்
மாற்றுகிறீர் மண்ணின் சாயலென்னில்

பாரிலென் கரங்கள் போரினில் ஜெயிக்க
நீரே உம் நித்திய புயத்தால் தாங்கியே
ஆனந்த தைலத்தால் உள்ளம் வழிய
அன்பரே நீர் அபிஷேகித்தீர்

அன்பரே உம்மிலே அன்பு கூர்ந்தோருக்கு
ஆயத்தமாக்கிய அனந்த நன்மைகள்
கண்கள் கண்டதில்லை கேட்டறிந்ததில்லை
கானான் ஆவியால் கருணை செய்தீர்

அந்த நாள் வரையும் என்தனைக் காப்பீரே
எந்தையே உமக்காய் சொந்தமாயளித்தேன்
சந்ததம் நிலைக்கும் சீயோன் பர்வதம் போல்
என்றும் கிருபையினால் இருப்பேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS