Aanandha Thuthi Oli | ஆனந்த துதி ஒலி

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்

மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோம்
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு – ஆ…. ஆ…..

ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மணியாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ…. ஆ…..

விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுத்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ…. ஆ…..

யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் – ஆ…. ஆ…..

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS