To Advertise Contact - christmusicindia@gmail.com

Aanandhamaaga Anbaraippaaduven | ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன்

Loading

ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன்
ஆசையவ ரென்னாத்து மாவிற்கே
ஆசிகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே

பல்லவி
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறு எங்குமில்லையே

தந்தை தாய்முன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனேன் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார் – இயேசுவல்லால்

கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார் – இயேசுவல்லால்

ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம் – இயேசுவல்லால்

அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம் – இயேசுவல்லால்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS