To Advertise Contact - christmusicindia@gmail.com

Ekkaala Thoniyode | எக்காள தொனியோடே

Loading

எக்காள தொனியோடு மானிடரே வாரீர்
எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்
அல்லேலூயா! அல்லேலூயா (24)

என் இயேசு போன்னேசு, என்னை மாற்றியவரும் அவரே
அன்போடும் பண்போடும் என்னை நடத்தியவரும் அவரே – அல்லேலூயா

சந்தோசம் (2) என்னை ஆவியிலே நிறைத்தீர்
சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன் – அல்லேலூயா

கல்வாரி நாயகனாம் இயேசு மீண்டும் வந்திடுவார்
கைதட்டிப் பாடிடுவேன், நான் அவருடன் சேர்ந்திடுவேன் – அல்லேலூயா

சாத்தான் என்னை அணுகும்போது இயேசுவை கூப்பிடுவேன்
சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கும் ஜெயம் – அல்லேலூயா

அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள்
அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS