To Advertise Contact - christmusicindia@gmail.com

Ellaiyillaa Kirubai | எல்லையில்லா கிருபை

Loading

எல்லை யில்லா கிருபை
என்னைச் சூழ்ந்து கொள்ளும் – 2
இந்தப் புதிய நாளில்
உமது அருளைப் பொழியும் (2)

மனிதன் கதவை அடைத்தால்
என் தேவன் அதையே திறப்பார் – 2
மனிதர் அன்பு மாறும்
என் நேசர் என்றும் மாறார் – 2

பூர்வ நாளை நினைத்தேன்
உம் புண்ணிய செயலை உணர்ந்தேன் – 2
எண்ணில்லா நன்மைகள் அடைந்தேன்
என் இயேசுவை என்றும் மறவேன் – 2

நெஞ்சம் நொந்த போது
தஞ்சம் தந்த தேவன் – 2
நான் வாடி நின்ற போது
என்னைத் தேடி வந்த தேவன் – 2

வீசும் புயலின் நடுவில்
கலங்கும் வாழ்க்கை படகில் – 2
இயேசு துணையாய் வருவார்
என்னைப் பாசமோடு காப்பார் – 2

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS