En Nenjil | என் நெஞ்சில்

என் நெஞ்சில் நிறைந்தவரே
நேசரே இயேசு ராஜா
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
அப்பா உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

உலகக் கவலைகள் மறக்கின்றேன்
உயிரே உம பிரசன்னம் வருகின்றேன்
இணைந்து இசைந்திருப்போம்
என்றும் மகிழ்ந்திருப்போம் என் இயேசையா (2) – என்

ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அப்பனே இன்று அர்ப்பணித்தேன் – உம
விருப்பம் நிறைவேறட்டும் – என்
விருப்பம் மறைந்திடட்டும் என் இயேசையா (2) – என்

சிலுவையில் சிந்தின திரு இரத்தம்
எனக்குத் தருதே முழுச் சுத்தம்
ஆண்டு நடத்திடுமே
அரணாய் மாறிடுமே என் இயேசையா (2) – என்

Close Menu
error: Content is protected !!