Ennai Nesikkindraayaa | என்னை நேசிக்கின்றாயா

என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி மீட்டிட பிதா அனுப்பியதால்
ஓடி வந்தேன் மானிடனாய்

பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா

பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிசாகச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்

உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ?

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS