Ennai Undaakkiya | என்னை உண்டாக்கிய

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை

என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியாலே உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே – என்னை

பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே – என்னை

ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமில்லை ஆகையால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந் தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் – என்னை

Close Menu
error: Content is protected !!