To Advertise Contact - christmusicindia@gmail.com

Ilaippaaruthal Eenthidum | இளைப்பாறுதல் ஈந்திடும்

Loading

இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே
இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவி யாத்திரை தீர்ந்திடும் போதே
பரலோகம் அளித்திடுமே

எந்தன் வாஞ்சை உயர் சீயோன்
என்னை வந்தவர் சேர்த்துக் கொள்வார்
கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே
கர்த்தர் தாமே துடைத்திடுவார்

இந்த மண்ணுலகாசை வெறுத்தேன்
இப்புவி எந்தன் சொந்தமல்ல
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கித் தொடருகிறேன் – எந்தன்

நம் முன்னோர் பலர் அக்கறை மீதே
நமக்காகவே காத்திருக்க
விண்ணில் ஜீவா நதிக்கரை ஓரம்
வேகம் நானும் சேர்ந்துகொள்வேன் – எந்தன்

அற்பமான சரீரம் அழிந்தே
அடைவேன் மறுரூபமாக
புதுராகம் குரல் தொனியோடே
புதுப்பாட்டு பாடிடுவேன் – எந்தன்

பரலோகத்தில் இயேசுவை அல்லால்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்போம்
ஆவல் தீர அணைத்துக் கொள்ளுவோம் – எந்தன்

உண்மையாக உம ஊழியம் செய்ய
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவராமலே கர்த்தர் கரத்தில்
தருவேன் என் ஆவியை நான் – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS