To Advertise Contact - christmusicindia@gmail.com

Inimai Inimai Ithu | இனிமை இனிமை இது

Loading

இனிமை இனிமை இது இனிமை
மகிமை மகிமை புது மகிமை
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தாள்
இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை (3) – இனிமை

காலையும் மாலையும் புது கிருபை
கண்ணின் மணிபோல காக்கும் கிருபை
இறுதி வரைக்கும் வரும் கிருபை
நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை – இனிமை

மலைகள் விலகினாலும் மாறா கிருபை
மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை – இனிமை

அனாதி சிநேகத்தால் வந்த கிருபை
ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
அழகிய தேவ குமாரன் இயேசு
அளித்திட்ட அதிசயமான கிருபை – இனிமை

வனாந்தர வழிதனில் வந்த கிருபை
வழி தப்பிப் போனோரைக் காக்கும் கிருபை
வல்லமையுள்ள தேவனின் ஆவி
வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை – இனிமை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS