Irul Soozhum Kaalam | இருள் சூழும் காலம்

Loading

இருள் சூழும் காலம்
இனி வருதே
அருள் உள்ள நாட்கள்
பயன் படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும்முன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்

திறவுண்டவாசல் அடைபடும் முன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

திரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

எத்தனை நாடுகள் இந் நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன் படுத்தும் மக்கள் ஞானவான்கள்

விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒரு மனம், ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே

இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பென்னும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லாத் தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS