Iyaesuvae En Devan | இயேசுவே என் தேவன்

இயேசுவே என் தேவன் என்னை
என்றும் நடத்திடுவார்

மலைகள் விலகிடினும், நிலை
பர்வதம் அதிர்ந்தாலும்
கிருபைகள் அளித்தவரே
சமாதானமே தந்திடுவார்

நதியைக் கடந்திடினும், அவர்
என்னுடன் நடந்திடுவார்
தீயினில் நடந்திடினும் என்
நடுவினில் வந்திடுவார்

வாழ்க்கைப் படகினிலே
வரும் அலைகள் நடுவினிலே
வந்தே அமர்ந்திடுவார்
வல்ல தேவனை துதித்திடுவேன்

வறுமை வியாதிகளும் – என்னை
வருந்திய போதினிலும்
வைத்தியராய் இருந்தே என்
வேண்டுதல் கேட்டிடுவார்

இத்தனை ஆண்டுகளாய் நம்மை
நடத்திய நல் தேவன்
இன்னமும் நடத்திடுவார் என்
இயேசுவை நம்பிடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS