Iyesuvin Naamam Valla | இயேசுவின் நாமம் வல்ல

இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
வல்லமையுள்ளது வல்லமையுள்ளது

இயேசுவின் நாமத்தினால் இரண்டு மூன்று பேர்கள்
கூடிடும் போது வந்திடுவாரே ஜெபத்தை கேட்பாரே – இயேசுவின்

வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேலேயும்
இரட்சிக்க வல்ல நாமம் வேறில்லை இயேசுவின் நாமமே – இயேசுவின்

பூமியின் கீழானோர் யாவரின் முழங்கால்கள்
முடங்கும் நாமம் அதிகாரமுள்ள இயேசுவின் நாமமே – இயேசுவின்

சாத்தான் எதிர்த்தாலும் சதி பல செய்திட்டாலும்
சாத்தானை மேற்கொள்ள வல்லமை தந்திடும்
இயேசுவின் நாமமே – இயேசுவின்

பாவம் போக்கிடும் பரிசுத்தம் நல்கிடும்
பரலோக பாக்கியம் பக்தருக்கருளும் இயேசுவின் நாமமே – இயேசுவின்

Close Menu
error: Content is protected !!