To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyesuvin Naamaththinaal | இயேசுவின் நாமத்தினால்

Loading

இயேசுவின் நாமத்தினால் – ஒரு
அற்புதம் எனக்கு நடக்கும் (2)
இயேசுவின் நாமத்தினால் – ஒரு
ஒரு புதுவழி எனக்கு திறக்கும் (2)

ஆமென் அல்லேலூயா (4)

தூதர்கள் சேனை இறங்கும் – ஒரு
யுத்தம் எனக்காய் நடக்கும் (2)
சிலுவை வெற்றி யாவும் – என்
சொந்தமாய் வந்து சேரும் (2) – ஆமென்

சூழ்நிலை எனக்காய் மாறும் – நான்
ஜெபித்தது வந்து சேரும் (2)
சத்துரு கோட்டை வீழும் – நான்
சந்ததி தோல்வி மறையும் (2) – ஆமென்

மூடிய கதவு திறக்கும் – முன்
நிற்கும் தடைகள் விலகும் (2)
இருளின் நாட்கள் நீங்கும் – மா
வெளிச்சம் என்மேல் உதிக்கும் (2) – ஆமென்

சகல வியாதியும் – இயேசு
தழும்புகளால் மாறும் (2)
பாவ நோய்கள் எல்லாம் – இயேசு
இரத்தத்தால் நீங்கிடும் (2) – ஆமென்

தேவன் தந்த தரிசனம் – அவை
நிச்சயம் நடந்தே தீரும் (2)
கர்த்தரின் வாக்குத்தத்தம் – அது
நிச்சயம் என்னை உயர்த்தும் (2) – ஆமென்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS