To Advertise Contact - christmusicindia@gmail.com

Jaathigale Ellaarum | ஜாதிகளே எல்லாரும்

Loading

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே

இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்

ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்

பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்

எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட

வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS