To Advertise Contact - christmusicindia@gmail.com

Jeeva Kiristhu Uyirththezhunthaar | ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

Loading

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரிதெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்!

அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தார்!
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்

பாதாளம் யாவையும் மேற்கொண்டவர்
வேதாளக் கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா

நாம் தொழுவோம் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து சாட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா

பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோகமெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா

நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS