காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே
கானகப் பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுமே
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுமே
மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா இயேசுநாதா
எளியேனைக் கரங்கொண்டு தாங்குவீர்