fbpx

Kanivin Karangal | கனிவின் கரங்கள்

கனிவின் கரங்கள் தினம் வழி நடத்தும்
நம் ஜீவிய கால மட்டும்
பயம் வேண்டாம் இனி கர்த்தர் துணையாய் உண்டு
புவி யாத்திரை கடந்திடுவோம்

சரணங்கள்
பகலில் மேகஸ்தம்பமாய் இராவினில் அக்கினி தூண்களாய்
தாக ஜலத்திற்காய் பிளந்தார் பாறையை
ஜீவ மன்னா பட்சணமாய்
தந்த யேகோவாவை வாழ்த்திடுவோம் – கனிவின்

கசந்தமாரா வாழ்வினை மதுரமாக மாற்றியே
தேனிலும் இனிய வாக்குகளாலே
தேற்றி நம்மை ஆற்றிடுவார்
அந்த நம் தேவனை வாழ்த்திடுவோம் – கனிவின்

யோர்தான் போன்ற துன்பமும் துயரம் வந்த போதிலும்
தேவ புயங்களின் பெலமதினால்
சோர்வில்லாமல் கடந்து வந்தோம்
வல்ல நல்ல தேவனை வாழ்த்திடுவோம் – கனிவின்

சத்துருசேனை எழும்பிய நமக்கெதிராய் வந்தாலும்
நமக்காக யுத்தம் செய்திடும் கர்த்தர்
சேனைய திபனாய் முன் செல்கிறார்
அவரின் கரங்களை பற்றிக் கொள்வோம் – கனிவின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS