To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththar En Belanum | கர்த்தர் என் பெலனும்

Loading

கர்த்தர் என் பெலனும் கீதமும் அவரே
ஆபத்தில் அரும்பெரும் அடைக்கலமே – என்

உன்னத ஒளியாய் முன்னுரைப்படியே
முன்னனி உதித்தனரே
விண்ணவர் போற்ற மன்னவர் மகிழ
மன்னவன் வந்தனரே – கர்த்தர்

மாயிருள் நீக்கும் மாபெரும் கிருபையை
மானிடர்க் கீர்த்திடவே
தாழ்மையாய் வந்த தற்பரன் அன்பை
தாரணி போற்றிடுவோம் – கர்த்தர்

பாவியை மீட்கும் பரமனின் சுத்தனாய்
பிறந்தனர் பெத்தலையே
பெயதை வென்று பரலோகம் திறந்தெம்
பாதைக்கு தீபமானார் – கர்த்தர்

இம்மானுவேலனாய் இயேசென்னும் உருவில்
நம்முடன் வாசஞ் செய்தார்
கண்ணீர்கள் துன்பங்கள் துயரங்கள் நீக்கி
அன்புடன் அரவணைத்தார் – கர்த்தர்

பெருவெள்ளம் பாய்திடின் புகளிடமீந்து
பரிவுடன் நடத்திடுவார்
காற்றுக்கு ஒதுங்கும் கன்மலை நிழலும்
கர்த்தனேசு அல்லவோ – கர்த்தர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS