Karththarin Panthiyil | கர்த்தரின் பந்தியில்

Loading

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தர் அன்பாய் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூர்வமாய் எண்ணி

ஜீவா அப்பம் அல்லோ! – கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ
பாவ மனங் கல்லோ – உனக்காய்ப்
பகிரப்பட்டதல்லோ
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட

தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு
பாவக் கோட்டைக் கூறு – ராப்போசன
பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில்மனம் வைத்து அந்நியன் ஆகாதே
கர்த்தரின்

அன்பின் விருத்தாமே – கர்த்தருடன்
ஐக்கிய பந்தியாமே
துன்பம் துயர் போமே இருதயம்
சுத்தத் திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப் போதே வா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS