fbpx

Lesaana Kaariyam | லேசான காரியம்

லேசான காரியம் உமக்கது
லேசான காரியம்
பெலமுள்ளவன் பெலனற்றவன்
பெலமுள்ளவன் பெலனற்றவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம்

மண்ணை பிசைந்து மனிதனை படைத்தது
லேசான காரியம்
மண்ணான மனிதனுக்கு மன்னாவை அளித்தது
லேசான காரியம்

பெருமழை பெய்தும் பேழையை காப்பது
லேசான காரியம்
பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும்
லேசான காரியம்

கற்பாறை போல் கடல் மேல் நடப்பது
லேசான காரியம்
கற்சாடி நீரை கனிரசமாக்குதல்
லேசான காரியம்

கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
லேசான காரியம்
ஆழ்கடல் மீனத்தில் வரிப்பணம் காண்பது
லேசான காரியம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS