To Advertise Contact - christmusicindia@gmail.com

Enna Thiyaagam En | என்ன தியாகம் என்

Loading

பல்லவி
என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ

விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரைய்யா
மானிடர் மேல் அன்பினால் – என்ன

ஜெனித்த நான் முதலாய் – கல்வாரியில்
ஜீவனையும் ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா
பாவியை மீட்பதற்காய் – என்ன

தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர்
ஸ்தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ
முன் பாதை காட்டினீரே – என்ன

பாடுகளல்லவோ உம்மை மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்
என் ஜீவனையும் வைத்தே – என்ன

இன்பம் எனக்களிஎன் என் அருமை
இயேசு தான் என் பங்கல்லோ
நேசரின் பின்னே போகத் துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால் – என்ன

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS