Manthaiyil Seraa Aadugale | மந்தையில் சேரா ஆடுகளே

Loading

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

காடுகளில், பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவார் யார் என் ஆடுகளை! – மந்தையில்

சொல்லப் பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்பு பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவன் கட்டளை கீழ்ப்படிவீர் – மந்தையில்

எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும் – மந்தையில்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS