To Advertise Contact - christmusicindia@gmail.com

Meetpar Iyaesu Kurusil | மீட்பர் இயேசு குருசில்

Loading

பல்லவி
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

சரணங்கள்
லோகப்பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக்குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் – மீட்பர்

இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில் – மீட்பர்

தேவனே என்னை ஏன் கை விட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையே – அவர் – மீட்பர்

அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப்பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம் – மீட்பர்

பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி, நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ – மீட்பர்

கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல்மனமும் உருகிடுமே
மாயலோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும் – மீட்பர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS