Megangal Naduve | மேகங்கள் நடுவே

மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

பல்லவி
வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகைமுகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

கண்ணீரும் துபமும் கடந்து போகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS