To Advertise Contact - christmusicindia@gmail.com

Naan Nesikkum Devan | நான் நேசிக்கும் தேவன்

Loading

நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் – 2

நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவை துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் – 2

கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார் – நான் பாடி

பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசி தனிலே
மன்னாவைத் தந்திடுவார் – நான் பாடி

தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை
தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்று கோலாய்
காத்திட வந்திடுவார் – நான் பாடி

நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே – நான் பாடி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS