To Advertise Contact - christmusicindia@gmail.com

Paarpotrum Venthan | பார்போற்றும் வேந்தன்

Loading

பார்போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைந்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடிடுவேன்
ஆர்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா

பாவ மேகம் யாவும் களைந்து சென்றதே
பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே

தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே
கந்தல், அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கவே
வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே!

நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்கு செல்வேன்
என் முன்னே அநேக சுத்தர் செல்கிறார்
இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே!

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS