சீயோன் மணவாளன்
நேசர் இயேசு ராஜன்
தூய மணாளிக்காய்
மேகங்கள் மேல் வருவார்
பல்லவி
வானில் ஆனந்தமாய்
எக்காலம் தொனிக்கவே
பாரில் ஜெயமாக
ஜீவித்தோர் ஏகிடுவார்
ஆவியின் கண்களால்
அன்பரை மாத்திரமே
தரிசித்து நேசித்தார்
மேகத்தில் சேர்த்திடுவார்
மான்போல வாஞ்சையாய்
தாகமாய் சேவைக்காய்
தியாகமாய் ஜீவனை
ஈந்தார் பறந்திடுவார்
ஜெபத்திலே விழிப்பாய்
அகத்திலே களிப்பாய்
ஏகுவோர் எதிர் கொண்டு
ஏகநோடே இசைய
பாடுவோம் ஜெயகீதம்
ஆளுவோம் என்றென்றும்
ஆனந்தம் ஆனந்தம்
சீயோனில் ஆனந்தம்