திரித்துவ தேவா மகிமைப் பிரதாபா
திருப்பாதம் பணிந்து நின்றோம்
பரிசுத்தமான பரமனே உம்மை
பாடியே பணிந்து நின்றோம்
இத்தரை தன்னிலே சத்திய நாமத்தை
மெத்தவும் பாடிடுவோம்
சத்தியனாம் எங்கள் நிமலனின் பாதத்தை
நித்தமும் தொழுதிடுவோம்
வித்தகளே உந்தன் வியத்தகு செயல்களை
விளக்கியே கூறிடுவோம்
கர்த்தாதி கர்த்தனே கருணை பிரவாகனே
களிப்புடன் பாடிடுவோம் – திரித்துவ
சுரமண்டலக் கீத சத்தங்களாலும்
கர்த்தரைத் தொழுதிடுவோம்
பரமண்டலத் தந்தை பரம சமூகத்தில்
பாடல்கள் பாடிடுவோம்
நிறை கடல் போல் நின்றெம்மைக் காக்கும்
நித்தனே உன்னைத் தொழுவோம்
வருவாய் பரனே வல்ல மெய் தேவா
வந்தனை புரிந்து நின்றோம் – திரித்துவ
எங்கும் நிறைந்திட்ட இணையற்ற தேவா
எங்கட்கு வரம் அருள்வாய்
பொங்கும் பேரின்பத்தில் புது பெலனடைய
வல்ல மெய் தேவா வந்தெம்மைக்காவாய்
வல்லமை தந்திடுவாய்
நல்ல உன் நாமத்தை நானிலத்தில் கூற
நாவினில் நிறைந்திடுவாய் – திரித்துவ