Thooya Aaviyaanavar | தூய ஆவியானவர்

சரணங்கள்
தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பல்லவி
பரிசுத்தப் பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

பலபல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகல வில்லை எனவே நீரே இறங்கும் – பரிசுத்த

ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூதாயத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் – பரிசுத்த

ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும் – பரிசுத்த

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS