To Advertise Contact - christmusicindia@gmail.com

Vanaanthiram Vayalveli | வனாந்திரம் வயல்வெளி

Loading

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே
வயல் வெளி காடாக எண்ணப்படுமே
பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே

வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்
காடுவெளி களித்து செழிக்கும்
லீபனோனின் மகிமை வாருமே
கர்மேல் சாரோன் அழுது பெறுமே

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி
தள்ளாடும் கால்களைப் பெலப்படுத்தி
திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்
பதில் அளிக்க தேவன் வருவார்

குருடர்களின் கண்கள் காணுமே
செவிடர்களின் செவிகள் கேட்குமே
முடவன் மானைப்போல துள்ளுவான்
ஊமையன் நாவும் பாடுமே

மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே
நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே
ஆசீர்வாத மழை பொழியுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS