To Advertise Contact - christmusicindia@gmail.com

Yaarukkuth Theriyum | யாருக்குத் தெரியும்

Loading

யாருக்குத் தெரியும் உந்தனின் அழைப்பு
அன்பரின் பாதம் வந்திடுவாய்
அழைத்தவர் உன்னை அருமையாய் நடத்தி
அனுதினம் ஊழியம் அளித்திடுவார்

யோனாவைப் போல போனாயோ நீயும்
நினிவேயின் பாரம் உனக்கில்லையோ
யாருக்குத் தெரியும் மன்னிப்பார் தேவன் என்று
நினிவேயின் மக்களும் மனம் மாறினார் – யாருக்கு

எஸ்தரைப் போல உயர்த்தினாரோ உன்னை
இஸ்ரவேல் ஜனத்தை மீட்டிடவே
யாருக்குத் தெரியும் உந்தனின் மேன்மை
உன்னத ஊழியம் செய்திடவே – யாருக்கு

திகைத்திடும் போது தயங்கிடாதே நீ
தானியேல் ஜெபம் கேட்ட தேவன் உண்டே
திருகரம் அணைத்து புகலிடம் அளிப்பார்
திறப்பின் வாசலில் நின்றிடுவாயோ – யாருக்கு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS